உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்வு சீரமைப்பு பணி நீர் வெளியேறியதால் பரபரப்பு

வால்வு சீரமைப்பு பணி நீர் வெளியேறியதால் பரபரப்பு

கிணத்துக்கடவு, : கிணத்துக்கடவு, போலீஸ் ஸ்டேஷன் அருகே, வால்வில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு ரோட்டில் வழிந்தோடியதால் பரபரப்பு ஏற்பட்டது.அம்பராம்பாளையம் ஆற்றில் இருந்து, ஆழியாறு கூட்டு திட்ட குடிநீர் குழாய் கிணத்துக்கடவு வழியாக செல்கிறது. இதில், கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் பல இடங்களில் குடிநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. போலீஸ் ஸ்டேஷன் அருகே, வால்வில் பெரும் அளவில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது.இதை தொடர்ந்து, வால்வை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது வால்வில் இருந்து தண்ணீர் திடீரென வெளியேறி ரோட்டில் வழிந்தோடியது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நீர் வெளியேறுவது குறைந்ததும், வால்வை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி