உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடியை கண்டித்ததால் அக்காவை தாக்கிய தம்பி

குடியை கண்டித்ததால் அக்காவை தாக்கிய தம்பி

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, கல்லாபுரத்தில் அக்காவை தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.கிணத்துக்கடவு, கல்லாபுரத்தை சேர்ந்த பொன்னுசாமியின் மகன் கார்த்தி, 20, கூலி தொழிலாளி. பெற்றோர் இறந்த நிலையில், இவர், தனியாக வசித்து வருகிறார்.இவரின் அக்கா காயத்திரி, 22, திருமணமாகி கணவன் குடும்பத்துடன், அதே பகுதியில் வசித்து வருகிறார்.இந்நிலையில், கார்த்தி அடிக்கடி மது குடித்து வருவதை அக்கா கண்டித்துள்ளார். இதனால், அக்கா - தம்பி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. நேற்று, அக்காவை கார்த்தி தாக்கியுள்ளார். மேலும், காயத்திரியின் கணவர் வைத்திருந்த காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.இதுகுறித்து, கிணத்துக்கடவு காயத்திரி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார்த்தியை கைது செய்து, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ