உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பைப் பிடித்து இறங்கிய  வாலிபர் தவறி விழுந்து பலி

பைப் பிடித்து இறங்கிய  வாலிபர் தவறி விழுந்து பலி

கோவை;குன்னுார் அரவங்காடு பகுதியை சேர்ந்தவர் மவுலீஸ்வரன், 28, தனியார் நிறுவன சூப்பர்வைசர். இவர் கடந்த, 5ம் தேதி கன்னியாகுமரி செல்வதாக கூறி கோவை வந்தார். இங்கு கவுண்டம்பாளையத்தில் உள்ள, ஹவுசிங் யூனிட்டில் தனது இரண்டு தோழிகளுடன், 4வது மாடியில் தங்கியிருந்தார்.அப்போது மவுலீஸ்வரன் மற்றும் அவரது தோழிகள் மூன்று பேரும், மது குடித்ததாக தெரிகிறது. அந்த சமயத்தில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவரது தோழிகள், மவுலீஸ்வரனை வீட்டிற்குள் வைத்து பூட்டி விட்டு வெளியே சென்றனர்.வெகு நேரமாகியும் கதவை திறக்காததால், மவுலீஸ்வரன் பால்கனி வழியாக வெளியே வந்து சுவற்றில் உள்ள பைப்பை பிடித்து,கீழே இறங்க முயற்சி செய்தார்.அதில் அவர் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை