உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிமகன்கள் அலப்பறையால் அச்சம்: மதுக்கடையால் பிரச்னைகள் ஏராளம்

குடிமகன்கள் அலப்பறையால் அச்சம்: மதுக்கடையால் பிரச்னைகள் ஏராளம்

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப் அருகே உள்ள அரசு டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி மக்கள் வலியுறுத்துகின்றனர்.கிணத்துக்கடவு, பழைய பஸ்டாப் அருகே, அரசு டாஸ்மாக் மதுக்கடை செய்யல்படுகிறது. இந்த கடை தனியார் வணிக வளாகத்தில் உள்ளது. மேலும், இந்த கடையின் அருகாமையில் கோவில், உணவகங்கள், மருந்து மற்றும் பழக்கடைகள் உள்ளன. மேலும், மதுக்கடையின் அருகில் ஆட்டோ ஸ்டாண்ட், பொதுக்குடிநீர் குழாயும் உள்ளது.மதுக்கடையின் எதிரே, தனியார் மருத்துவமனை மற்றும் பிற கடைகள் உள்ளது. மேலும், இப்பகுதியில் தினம் தோறும், காலை முதல் இரவு வரை கூட்ட நெரிசல் நிறைந்த பகுதியாகவும் உள்ளது.இந்த மதுக்கடைக்கு மதியம் முதல் இரவு வரை வரும், 'குடி'மகன்களின் அட்ராசிட்டி தாங்க முடியவில்லை என அப்பகுதியினர் கூறுகின்றனர்.இங்கு வந்து மது அருந்தி விட்டு, ரகளையில் ஈடுபடுகின்றனர். போதையில் இருப்பவர்கள், பொதுக்குழாயில் குடிநீர் பிடித்து செல்பவர்களிடமும், ஆட்டோ ஓட்டுநர்களிடமும் ரகளையில் ஈடுபடுகினறனர். இதனால் பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.எனவே, இங்குள்ள அரசு மதுக்கடையை நிரந்தரமாக மூடவோ அல்லது வேறு இடத்திற்கு மாற்றம் செய்யவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்கள் கூறியதாவது:கிணத்துக்கடவு பஸ் ஸ்டாப் பகுதியில், ஏராளமான கடைகள், கோவில், உணவகம், மருந்தகம் என பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் இடத்தில், டாஸ்மாக் மதுக்கடை இருக்க கூடாது. மதுக்கடையை மூட வலியுறுத்தி, பல அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், மனு வழங்கப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.ஆனால், எந்த பயனும் இல்லாமல் போனது. மக்கள் படும் துயரங்களை நேரில் வந்து பார்க்க அரசு அதிகாரிகளுக்கு நேரமும் இல்லை. மதுக்கடையில் கல்லா நிறைந்தால் போதுமென, அதிகாரிகள் உள்ளனர். இதனால், தினந்தோறும் புதுப்புது பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் மக்கள் வேதனையில் உள்ளனர்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ