உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடிசைகள் அமைத்து குடியேற சென்ற துாய்மை பணியாளர்களால் பரபரப்பு

குடிசைகள் அமைத்து குடியேற சென்ற துாய்மை பணியாளர்களால் பரபரப்பு

கோவை;சி.எம்.சி., காலனியில் குடிசைகள் அமைக்க சென்ற துாய்மை பணியாளர்களுடன், மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தனர்.உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பால பணிக்காக, சி.எம்.சி., காலனியில் இருந்த குடியிருப்புகள் கடந்த, 2021ல் இடித்து அகற்றப்பட்டன.இதையடுத்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், 235 குடியிருப்புகள் உக்கடம் புல்லுக்காடு பகுதியில் கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.உக்கடம், செல்வபுரம் பை-பாஸ் ரோட்டில் மாநகராட்சி சில்லறை மீன் மார்க்கெட் வளாகத்தை இடித்துவிட்டு அங்கு, 298 குடியிருப்புகள் கட்டப்படவுள்ளன.பழைய மீன் மார்க்கெட்புல்லுக்காட்டில், கட்டப்பட்டுள்ள புதியமீன் மார்க்கெட்டுக்கு இது வரை இடமாற்றம் செய்யப்படவில்லை.இதனால் கட்டுமான பணிகள் துவங்கப்படாமல்,துாய்மை பணியாளர்கள் பெரும்பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் குடியிருப்புகள் இடிக்கப்பட்ட, சி.எம்.சி., காலனியில் குடிசை அமைத்து குடியேறநேற்று காலை குவிந்தனர்.சம்பவ இடத்துக்கு சென்ற மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார், போலீசார் துாய்மை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.தொடர்ந்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனை துாய்மை பணியாளர்கள் சந்தித்தனர். தேர்தல் முடிந்தவுடன் உரிய நடவடிக்கை எடுப்பதாக, அவர் உறுதி அளித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டனர்.

ஆறுதல்'

தமிழ்நாடு துாய்மை காவலர் பொது தொழிலாளர் சங்க பொது செயலாளர் ஜோதி கூறுகையில்,''கமிஷனரை சந்தித்தபோது தேர்தல் முடிந்தவுடன், மீன் மார்க்கெட்டை புல்லுக்காட்டுக்கு இடமாற்றிவிட்டு குடியிருப்புகள் கட்டுமான பணிகளை துவங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லையேல் சி.எம்.சி., காலனியில் குடிசைகள் அமைத்து குடியேறுவோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ