உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை உண்டு

அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை உண்டு

கோவை;கோவையில் எதிர்வரும் ஐந்து நாட்கள் மிதமானது முதல் கனமழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. அதன்படி, இன்று, 38 மி.மீ., நாளை 27 மி.மீ., 16ம் தேதி 29 மி.மீ., 17 ல் 30 மி.மீ., 18 ல் 31 மி.மீ., மழை பதிவாக வாய்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை மீண்டும், 31-35 டிகிரி செல்சியஸ் ஆக அதிகரித்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை, 21-25 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 80 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 40 சதவீதமாக பதிவாக வாய்ப்புள்ளது. மழை எதிர்பார்க்கப்படுவதால், நீர் பாய்ச்சுதல், மருந்து மற்றும் உரம் தெளித்தல் பணிகளை ஒத்திப்போட அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலவும் வானிலை, கோமாரி நோய்க்கு சாதகமானதாக உள்ளதால், கறவை மாடு மற்றும் உழவு மாடுகளின் வாய் மற்றும் கால் குழம்புகளை பரிசோதனை செய்யவேண்டும். கால்நடைள் ஏரி அல்லது குளத்தின் அருகில் உள்ள புற்களை மேயாமல் பார்த்துக்கொள்வதன் வாயிலாக, தட்டைப்புழுக்களின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ