உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சத்தி ரோட்டில் மூன்று வாகனங்கள் மோதல்

சத்தி ரோட்டில் மூன்று வாகனங்கள் மோதல்

கோவை: அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மோதிக்கொண்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.நேற்று மதியம், சத்தி ரோட்டில், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் சிக்னல் அருகே கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. காருக்கு பின்னால், மினி சரக்கு வாகனம் நின்றிருந்தது. அவ்வழியாக வந்த ஒரு சரக்கு வாகனம், சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த மினி சரக்கு வாகனத்தின் மீது மோதியது. சரக்கு வாகனம், முன்னால் நின்ற கார் மீது மோதியது. இதனால் அப்பகுதியில், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்த சிலருக்கு காயம் ஏற்பட்டது. அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர்.நீண்ட நேரமாகியும் போலீசாரும், ஆம்புலன்ஸ் வாகனமும் வராததால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதன்பின் அங்கு வந்த போலீசார், போக்குவரத்தை சரி செய்தனர். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை