உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மானாவாரி நிலத்திற்கு உழவு மானியம்

மானாவாரி நிலத்திற்கு உழவு மானியம்

அன்னுார்:மானாவாரி விவசாய நிலத்திற்கு, உழவு மானியம் வழங்கப்படுகிறது. குறைந்த பட்சம் ஒரு ஏக்கர் முதல் அதிகபட்சம் ஐந்து ஏக்கர் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 500 ரூபாய் வழங்கப்படும். மானாவாரி விவசாயிகள் ஆதார், வங்கி பாஸ் புத்தகம், ஸ்மார்ட் கார்டு ஆகியவற்றின் நகல், சிட்டா மற்றும் உழவு செய்த போட்டோ டிராக்டருடன் உள்ளது ஆகியவற்றுடன் காரே கவுண்டம்பாளையம் மற்றும் கரியாம் பாளையம் ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 97886 43941, 70944 83366 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அன்னுார் வட்டார வேளாண் துறையினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !