| ADDED : ஜூலை 22, 2024 03:03 AM
வால்பாறை:வால்பாறை அடுத்துள்ள, அட்டகட்டி வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் வன களப்பணியாளர்களுக்கான, தமிழ்நாடு உயிர்பன்மை மற்றும் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ், பயிற்சி நடந்தது. ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் பார்கவ்தேஜா தலைமை வகித்தார்.பயிற்சியில், யானைகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில், யானைகளின் வாழ்விடங்கள் குறித்தும், அவைகளின் வலசை பாதைகள் குறித்தும் முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்.யானைகள் ஏன் குடியிருப்பு பகுதிக்கு செல்கிறது என்பதை, வனத்துறையினர் ஆய்வு செய்ய வேண்டும். மேலும், யானைகள் - மனித மோதலை தடுக்க, வனத்துறை சார்பில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.ஓய்வு பெற்ற கால்நடை மருத்துவர் டாக்டர் மனோகரன், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் விலங்கியலாளர் பீட்டர்பிரேம், ஓசை அமைப்பின் நிர்வாகி காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டு, வன களப்பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.