உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயறு வகை சாகுபடியை அதிகரிக்க ரூ. 49 லட்சம் நிதி ஒதுக்கீடு

பயறு வகை சாகுபடியை அதிகரிக்க ரூ. 49 லட்சம் நிதி ஒதுக்கீடு

பெ.நா.பாளையம்;கோவை மாவட்டத்தில் பயறு வகை சாகுபடியை அதிகரிக்க, 49 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் துவரை, உளுந்து, பச்சை பயறு, கொள்ளு, கொண்டைக்கடலை, தட்டை பயறு அவரை மற்றும் நரிப்பயிறு உள்ளிட்ட பயறு வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு சராசரியாக, 609 மி.மீ., மழை பெய்கிறது. பயறு வகை பயிர்கள் குறுகிய கால வயதுடையது. குறைந்த நீர் தேவை உள்ள பயிர், 250 மி.மீ., அளவு நீர் போதுமானது. பயறு வகை செடிகள், அறுவடைக்கு பின்னர் கால்நடை தீவனத்திற்கு ஏற்றது. பயறு வகைகள் அதிக புரதச்சத்து கொண்டது. மாவுச்சத்து, கொழுப்பு, சுண்ணாம்பு, இரும்பு மற்றும் நார்ச்சத்தும் கொண்டவை. தழைச்சத்தை வேர் முடிச்சுகளில் சேமித்து, பயிர்களுக்கு வழங்கக்கூடியவை. பயறு வகை சாகுபடியினை அதிகரிக்க, பல்வேறு சாகுபடி முறைகளை பயன்படுத்தும் விவசாயிகளுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் சார்பில், பயறு வகை திட்டத்திற்கு, 49 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.காற்றில் உள்ள தழைச்சத்தை பயிரில் நிலை நிறுத்தவும், மணிச்சத்தை கரைக்கவும், சாம்பல் சத்தினை பயிருக்கு கிடைக்க செய்யக்கூடிய திரவ உயிர் உரங்கள், 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.வேர் வாயிலாக மண், விதை மூலம் பரவக்கூடிய நோய்களை கட்டுப்படுத்த, டிரைக்கோடெர்மா விரிடி, பூச்சிக்கொல்லி, 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. மேலும், கூடுதல் விபரங்களுக்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களையோ அல்லது உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்க திட்ட ஆலோசகரையோ அணுகலாம் என, வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை