உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இன்றும் நாளையும் மருதமலைக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லலாம்

இன்றும் நாளையும் மருதமலைக்கு இரு சக்கர வாகனத்தில் செல்லலாம்

கோவை : மருதமலை கோவிலுக்கு இன்றும், நாளையும் நான்கு சக்கர வாகனங்களில் வர வேண்டாம்; பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்களில் வருமாறு, கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், நாளை, நாளை மறுதினம் ஆகிய இரு விடுமுறை நாட்களில், அதிக பக்தர்கள் வருகை இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு, மேற்படி நாட்களில் மருதமலைக்கோவிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு, பக்தர்களுக்கு அனுமதியில்லை. மோட்டார் பைக், ஸ்கூட்டர் உள்ளிட்ட இரு சக்கர வாகனங்கள் மூலமும், மலைப்படிகள் வழியாக பாதயாத்திரையாகவும், திருக்கோவிலின் பஸ் வாயிலாக பக்தர்கள் செல்லவும், கோவில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.திருக்கோவில் நிர்வாகம், இத்தகவலை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !