உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

ஞான வேள்வி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், ஞான வேள்வி எனும் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இதில், 'ஆனந்தம் பொங்க?' என்ற தலைப்பில், ஆன்மீக பேச்சாளர் கிருஷ்ணா உரையாற்றுகிறார். ராம்நகர், ராமர் கோவிலில், மாலை, 6:30 மணிக்கு சொற்பொழிவு நடக்கிறது. முன்னதாக, மாலை, 6:00 மணிக்கு, ரமணர் பாடல்கள், ரமண சத்சங்கம் நடக்கிறது.

ஆண்டு திருவிழா

திருச்சி ரோடு, தி ஆயுர்வேதிக் டிரஸ்ட், ஸ்ரீ தன்வந்திரி கோவிலில், 48வது ஆண்டு திருவிழா நடக்கிறது. காலையில், முளபூஜை, பிரம்ம கலசபூஜை, தத்துவ ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், ஹோமங்கள் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு, அதிவாச ஹோமம், கலசாதிவாசம், அத்தாழ பூஜை மற்றும் பிரார்த்தனை நடக்கிறது.

சித்திரைத் திருவிழா

போத்தனுார், கணேசபுரம், முத்துமாரியம்மன் கோவிலில், சித்திரைத் திருவிழா நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு, கருப்பராயன் பூஜை நடக்கிறது. மதுக்கரை ரோடு, காமராஜ் நகர், * சக்தி விநாயகர், சித்தி விநாயகர், ஜெயமாரியம்மன் கோவிலின், சித்திரைத் திருவிழாவில், இரவு, 12:00 மணிக்கு மேல், எல்லைக் கட்டுதல் நடக்கிறது.

அபிஷேக விழா

கோவை நகரத்தார் இளைஞர் சங்கம் சார்பில், 630வது மாதாந்திர அபிஷேக விழா நடக்கிறது. பேரூர், பட்டீஸ்வரர் கோவில், பாலதண்டாயுதபாணி சன்னதியில், காலை, 10:00 மணிக்கு, அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம், வேல்பூஜை நடக்கிறது.

குண்டம் திருவிழா

80வது வட்டம், நாடார் வீதி, முனியப்பன் பத்ரகாளியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. இன்று மதியம், 12:00 மணிக்கு, அம்மன் பெரிய அபிஷேகம் நடக்கிறது.

மாணவர்களுக்கு வழிகாட்டல்

சத்தி ரோடு, குரும்பபாளையம், கே.வி.,மெட்ரிக் பள்ளியில், மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து வழிகாட்டல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு, பள்ளி அரங்கத்தில் நடக்கும் நிகழ்வில், பிரபல கல்வியாளர், ஜெய பிரகாஷ் காந்தி கலந்துகொள்கிறார்.

நர்த்தகி நடன போட்டி

குருகுலம் இன்டர்நேசனல் இன்ஸ்டிடியூட் சார்பில், ஸ்ரீ நர்த்தகி என்ற தலைப்பில், தேசிய கிளாசிக்கல் நடன போட்டி சீசன் 4 நடக்கிறது. சுந்தராபுரம், செங்கப்பக்கோனார் திருமண மண்டபத்தில், காலை, 8:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.

புத்தகக் கண்காட்சி

மக்கள் வாசிப்பு இயக்கம் சார்பில், கோவை புத்தகத் திருவிழா என்ற தலைப்பில், புத்தகக் கண்காட்சி நடக்கிறது. நவஇந்தியா பேருந்து நிறுத்தம் அருகே, மீனாட்சி ஹாலில், காலை, 11:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடக்கிறது. மாலை, 5:30 மணி முதல், எழுத்தாளர்கள் படைப்பாளர்கள் வாசகர்களின் உரைகள் நடக்கிறது.

உயர்கல்வி வழிகாட்டல்

அருந்தியர் சமூக பொதுநல அறக்கட்டளை சார்பில், பத்தாம் மற்றும் பிளஸ்2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, உயர் கல்வி வழி காட்டும் முகாம் நடக்கிறது. பேரூர், அருந்ததியர் சமூக மடத்தில், காலை, 9:30 முதல் மாலை, 4:30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது.

அவினாசிலிங்கம் பிறந்தநாள் விழா

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்வி நிறுவனத்தின் நிறுவன தலைவர் மற்றும் முதல் வேந்தர் அவினாசிலிங்கத்தின், 121 பிறந்த நாள் விழா நடக்கிறது. கல்லுாரியின் திருச்சிற்றம்பலம் கலையரங்கத்தில், காலை, 10:00 மணிக்கு விழா நடக்கிறது.

மராத்தான் போட்டி

பேரூர் அடிகளார் மருத்துவமனை சார்பில், 'ஆரோக்கியமே மிகப்பெரிய சொத்து' என்ற கருத்தை வலியுறுத்தி, மராத்தான் போட்டி நடக்கிறது. கோவில்பாளையம், கணேசபுரம், பேரூர் அடிகளார் மருத்துவமனை அருகே, காலை, 6:00 மணிக்கு மராத்தான் துவங்குகிறது.

அமைதியின் அனுபவம்

தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. * குனியமுத்துார், டிவைன் மேரி சர்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ