உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போத்தீஸ் சார்பில்  பள்ளிக்கு கழிப்பறை 

போத்தீஸ் சார்பில்  பள்ளிக்கு கழிப்பறை 

கோவை: போத்தீஸ் நிறுவனம் சார்பில் சி.சி.எம்.ஏ., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு, கழிப்பறை அமைத்துத்தரப்பட்டது.வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு மரக்கன்றுகள், இலவச புத்தகங்கள், சேமிப்பு உண்டியல் போன்றவை, போத்தீஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சி.சி.எம்.ஏ., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியருக்கு போத்தீஸ், புதிய கழிப்பறை வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதன் திறப்பு விழாவில், போத்தீஸ் துணை தலைவர் சக்திநாராயணன் பங்கேற்றார். உதவி பொது மேலாளர் அஜித், சி.சி.எம்.ஏ., பள்ளி தலைமையாசிரியை கவிதா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை