உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வால்பாறையில் திரண்ட சுற்றுலாப்பயணியர்

வால்பாறையில் திரண்ட சுற்றுலாப்பயணியர்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே வால்பாறை கூழாங்கல் ஆற்றில் சுற்றுலாப்பயணியர் குளித்து மகிழ்ந்தனர்.பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சுற்றுலத்தலமாக உள்ளது. இதனால், கோவை, திருப்பூர், உட்பட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப்பயணியர் அதிகளவு வந்து செல்கின்றனர்.இதனால், மே மாதங்களில் சுற்றுலா சீசன் களைகட்டும். அங்கு வாகனப்போக்குவரத்தும் அதிக அளவில் காணப்படும்.பல்வேறு பகுதிகளிலிருந்துவால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியர், அங்குள்ள கூழாங்கல் ஆற்றில் உற்சாகமாக குளித்துவிட்டுச் செல்வது வழக்கம்.தற்போது கோடைகாலம் என்பதால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க வால்பாறைக்கு குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் அதிகளவு சுற்றுலாப்பயணிகள் வால்பாறைக்கு வருவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. கூழாங்கல் ஆற்றில் உள்ள குறைந்தளவு நீரில் சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.மேலும், சுற்றுலா பயணியரும் உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி