உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டிராக்டரில் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கணும்

டிராக்டரில் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கணும்

கோவை:விவசாய பயன்பாட்டுக்கான டிராக்டர்களில், போக்குவரத்து விதிமுறையை மீறி, கட்டுமான பொருட்கள் ஏற்றிச் செல்வதாக, கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர், புகார் கூறியுள்ளனர்.இச்சங்கத்தினர், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொடுத்த மனு:கோவை மாவட்டத்தில், 500 சிறிய மற்றும் பெரிய டிப்பர் லாரிகள் கட்டுமான பொருட்கள் வினியோக பணியில் ஈடுபட்டுள்ளன. இவ்வாகனங்களுக்கு சாலை வரி, பசுமை வரி மற்றும் தகுதிச்சான்றுக்கான கட்டணங்களை முறையாக, செலுத்தி வருகிறோம்.கடந்த ஓராண்டாக, விவசாய உபயோகத்துக்கு பயன்படுத்தும் டிராக்டர் வாகனங்கள் மூலம் கட்டுமான பொருட்கள் வினியோகம் செய்யப்படுகின்றன.அவ்வாகனங்களுக்கு எந்த வரியும் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை; தகுதிச்சான்று இல்லாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும், கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல பயன்படுத்துகின்றனர்.அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு, எங்கள் தொழிலுக்கும் பாதிப்பை உருவாக்குகின்றனர். தொழில் ரீதியாக, சங்க உறுப்பினர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க, விவசாய பயன்பாட்டுக்கான வாகனங்களை, மற்ற உபயோகத்துக்கு ஈடுபடுத்துவதை, தணிக்கை செய்து தடுக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி