ரயில்வே ஸ்டேஷனில் மரக்கன்று நடும் விழா
கோவை : துாய்மையே சேவை திட்டத்தின் கீழ், கோவை ரயில்வே ஸ்டேஷனில் துாய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது.தெற்கு ரயில்வே மற்றும் வாய்ஸ் ஆப் கோவை அமைப்பும் இணைந்து, கோவை ரயில்வே ஸ்டேஷனில், தூய்மை பணி மேற்கொண்டனர். துாய்மையே சேவை திட்டத்தின் கீழ், தூய்மை பணி மேற்கொள்வது குறித்து, பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட வாய்ஸ் ஆப் கோவை உறுப்பினர்கள், ரயில்வே ஸ்டேஷனின் அனைத்து பிளாட்பாரங்களிலும், தூய்மை பணி மேற்கொண்டனர். தொடர்ந்து, மரக்கன்றுகள் நடு விழாவும் நடந்தது.நிகழ்ச்சியில், வாய்ஸ் ஆப் கோவை குழு தலைவர் சுதர்சன், செயலாளர் பாலசுப்பிரமணியம், கோவை ரயில்வே ஸ்டேஷன் மேலாளர் சச்சின், துணை மேலாளர் சதீஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.