உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இளைஞரின் குரல் வளையை அறுத்து போன் பறிக்க முயற்சி

இளைஞரின் குரல் வளையை அறுத்து போன் பறிக்க முயற்சி

கோவை:கோவை புரூக்பாண்ட் ரோட்டில் உள்ள ரயில் பாதையில், வாலிபர் ஒருவர் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்த இருவர், பணம், மொபைல்போனை கேட்டனர். அவர் தர மறுத்ததால், இருவரும் அவரை தாக்கி, பிளேடால் கழுத்தை அறுத்தனர்.குரல்வளை துண்டிக்கப்பட்ட நிலையில், விரைந்து மருத்துவமனைக்கு அவர் அழைத்து வரப்பட்டதால், உயிரை காப்பாற்ற முடிந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர். ரேஸ்கோர்ஸ் போலீசார், வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் குஜராத்தை சேர்ந்த அனூப், 23 எனத் தெரிந்தது. வேலை தேடி கோவை வந்ததாகவும், முதலில் தன்னை முதலில் ஏழு பேர் தாக்கியதாகவும், பின்னர் இருவர் தனது பேக்கை பறித்துக் கொண்டு தப்பியதாகவும், இந்தியில் எழுதி காட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை