உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 400க்கு மேல் மதிப்பெண் பெற்று அசத்திய இரட்டைச் சகோதரிகள்!

400க்கு மேல் மதிப்பெண் பெற்று அசத்திய இரட்டைச் சகோதரிகள்!

கோவை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய அரசுப் பள்ளியைச் சேர்ந்த இரட்டைச் சகோதரிகள், 400க்கு மேல் மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர்.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில், ரங்கநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும், இரட்டைச் சகோதரிகளான ஸ்ரீலோகமித்ரா 464 மதிப்பெண்ணும், ஸ்ரீசங்கமித்ரா 434 மதிப்பெண்ணும் பெற்று அசத்தியுள்ளனர்.மாணவிகள் ஸ்ரீலோகமித்ரா, ஸ்ரீசங்கமித்ரா கூறுகையில், 'எங்கள், அப்பா முடி திருத்தும் தொழிலாளி. வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். மிகவும் கஷ்டப்பட்டுதான் பெற்றோர் படிக்க வைக்கின்றனர். பொதுத் தேர்வில் இருவருமே, நல்ல மதிப்பெண் எடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தினமும் காலையில் எழுந்து சேர்ந்து படிப்போம். பள்ளியில் தரும் வீட்டுப் பாடங்களை அன்றைக்கே செய்து முடித்து விடுவோம்.கடந்த ஓராண்டாக 'டிவி' பார்ப்பதை தவிர்த்து, படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினோம். அதன் பலனாக நல்ல மதிப்பெண் கிடைத்துள்ளது.அதிக மதிப்பெண் பெற, ஆசிரியர்கள், எங்கள் பெற்றோர் மிகவும் உதவிகரமாக இருந்தனர். பிளஸ் 1ல் இருவருமே பயாலஜி மற்றும் கணிதப் பாடப் பிரிவைத் தேர்ந்தெடுக்க உள்ளோம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ