உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் நேரில் ஆஜர்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் நேரில் ஆஜர்

கோவை : கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, உதயகுமார் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்காக நேற்று ஆஜராகினர்.நீலகிரி மாவட்டம், கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதல்வர் ஜெ., மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த, 2017ம் ஆண்டு ஏப்., 23ம் தேதி நள்ளிரவில் ஓம்பஹதுார் என்ற பாதுகாவலரை கொலை செய்து, அங்கிருந்த ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன.இதையடுத்து போலீசார் இதில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த, 10 பேரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு ஊட்டி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில், முக்கிய குற்றவாளியான கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார்.தொடர்ந்து, சி.பி.சி.ஐ.டி., போலீசாரிடம் வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டது. இதுவரை, 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்துள்ளது.அவர்கள் அளித்த தகவலின்படி, பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டு சி.பி.சி.ஐ.டி., போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, உதயகுமார் ஆகியோரை நேற்று கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் வழங்கப்பட்டது. நேற்று காலை, 10:30 மணிக்கு ஆஜரானஅவர்களிடம் சி.பி.சி.ஐ.டி., போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.அதேபோல், ஜம்ஷீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகியோரை வரும், 30ம் தேதி ஆஜராகுமாறுசி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். வழக்கில் தீபு, 3வது, ஜம்ஷீர் அலி, 4வது, உதயகுமார், 7வது, ஜித்தின் ஜாய், 10வது குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை