மேலும் செய்திகள்
செங்குன்றம், ஆவடியில் 21 கிலோ கஞ்சா பறிமுதல்
05-Mar-2025
அன்னுார்; பெரியநாயக்கன்பாளையத்தில் இரண்டு கிலோ கஞ்சாவுடன் ஒருவர் பிடிபட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் அன்னூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் போலீசார் கரியாம்பாளையம் பிரிவு அருகே சோதனை நடத்தினார்.இதில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தீபக் குமார் பெஹரா, 35. என்பவரும் பெரியநாயக்கன்பாளையத்தில் பிடிபட்டவரின் மனைவி சஸ்மிதா மஜ்ஹி, 37. என்பவரும் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து மூன்று கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.பிடிபட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் கஞ்சாவை ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் கோவைக்கு கொண்டு வந்து புறநகர் பகுதியில் விற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது. கம்பெனியில் திருடியவர்கள் கைது
சூலுார், மார்ச் 7-சூலுார் அடுத்த காங்கயம்பாளையத்தில் தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலை செயல்படுகிறது.இங்கு பணிபுரியும் ரமேஷ், 34, சுரேஷ், 30 ஆகிய இரு தொழிலாளிகள், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரோட்டோவேட்டர் பிளேடு, சாப்ட் பாக்ஸ் உள்ளிட்ட உதிரி பாகங்களை திருடி சென்ற போது, சக ஊழியர்கள் கையும் களவுமாக பிடித்து நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து சூலூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
05-Mar-2025