உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய அளவிலான தடகளப்போட்டி கோவை மாணவிக்கு இரண்டு பதக்கம்

தேசிய அளவிலான தடகளப்போட்டி கோவை மாணவிக்கு இரண்டு பதக்கம்

கோவை, : தேசிய அளவிலான தடகளப்போட்டியில், கோவையை சேர்ந்த பள்ளி மாணவி, இரண்டு பதக்கங்கள் வென்றார்.இந்திய தடகள சம்மேளனம், சத்தீஸ்கர் மாநில தடகள சங்கம் சார்பில், 19வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் 2024'க்காக, தேசிய போட்டிகள் சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நடந்தது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 16 முதல் 18 வயதுடைய ஆயிரத்துக்கும், மேற்பட்ட வீரர் - வீராங்கனையினர் பங்கேற்றனர்.இதில், 100மீ., 200மீ., 400மீ., 800மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், தடைதாண்டும் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.தமிழக அணி சார்பில், 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இப்போட்டியில், கோவையை சேர்ந்த 2 வீரர்கள், 2 வீராங்கனைகள் என, நான்கு பேர் பங்கேற்றனர்.பெண்களுக்கான 100மீ., மற்றும் 200மீ., ஓட்டத்தில், கோவை யுனிக் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வரும், சி.எம்.எஸ்., பள்ளி மாணவி தியா பங்கேற்றார்.சிறப்பாக செயல்பட்ட தியா, தகுதி சுற்றுகளில் சீறிப்பாய்ந்தார். 100மீ., ஓட்ட இறுதிப்போட்டியில் 12.32 விநாடிகளில் இலக்கை கடந்து, வெள்ளிப்பதக்கம் வென்றார். இதே போல், 200மீ., ஓட்டத்தில் 25.23 விநாடிகளில், இலக்கை கடந்து வெண்கலம் வென்றார்.வெற்றி பெற்ற மாணவியை, பயிற்சியாளர் வேல்முருகன், தமிழ்நாடு தடகள சங்க நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், உள்ளிட்டோர்பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை