உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சமூக வலைதளத்தில் வானதி மீது அவதுாறு கோவையை சேர்ந்த இருவருக்கு சிறை

சமூக வலைதளத்தில் வானதி மீது அவதுாறு கோவையை சேர்ந்த இருவருக்கு சிறை

கோவை;கோவை தெற்கு பா.ஜ.,எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தொடர்ந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து கோர்ட்தீர்ப்பு வழங்கியுள்ளது.கோவை, தொண்டாமுத்தூர் உலியாம்பாளையத்தை சேர்ந்தவர்.கோவை தெற்கு தொகுதிபா.ஜ. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன். இவர் பா.ஜ.,வில்தேசிய மகளிர் அணி தலைவியாகவும் இருந்து வருகிறார்.கோவை, ரத்தினபுரியைசேர்ந்த பாலசுப்பிரமணியன்ஆதித்தன் மற்றும் மதுரையைச் சேர்ந்த சங்கர நாராயணன் கடந்த 2017 ஆம் ஆண்டு சமூக வலைதளங்களில் எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனை பற்றி திட்டமிட்டு உள்நோக்கத்துடன் அவதூறுகருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். இதையடுத்து அந்த இருவர் மீதும் சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் கோர்ட்டில்கிரிமினல் அவதூறு வழக்கைவானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தாக்கல் செய்தார்.விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் ஒரு நாள் சிறை தண்டனை மற்றும் தலா 10,000 வீதம் மொத்தம் 20,000 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.தீர்ப்பு பற்றி வானதி சீனிவாசன் கூறியதாவது:சமூக வலைதளங்களை பயன்படுத்தி பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் மட்டுமின்றி அடுத்தவர்களைகளங்கப்படுத்த முயற்சிப்பவர்களுக்கு இந்த தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும், என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ