உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாலிபர் கொலை வழக்கில் இருவருக்கு 3 ஆண்டு சிறை

வாலிபர் கொலை வழக்கில் இருவருக்கு 3 ஆண்டு சிறை

கோவை: வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், இருவருக்கு தலா மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து, கோவை இளம்சிறார் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கோட்டூர் அருகேயுள்ள வக்கம்பாளையத்தில் வசித்து வந்தவர் கார்த்திகேயன்,23. இவர் அடிக்கடி மது குடித்து விட்டு, மனைவியை துன்புறுத்தி வந்தார். இதனால் மனைவி கோபித்துக் கொண்டு, பெற்றோர் வீட்டுக்கு சென்றார். 2016, டிச., 12ல் மனைவியை அழைத்து வரச் சென்ற போது, மனைவியின் சித்தப்பா மகன்களான 15 மற்றும் 17 வயதுடைய இருவர் சேர்ந்து, கார்த்திகேயனிடம் தட்டி கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில், சிறுவர்கள் சேர்ந்து கார்த்திகேயனை, இரும்பு கம்பியால் தாக்கியதில் உயிரிழந்தார். கோட்டூர் போலீசார் விசாரித்து, இரண்டு சிறுவர்களை கைது செய்தனர். இவர்கள் மீது, கொலை வழக்கு பதிந்து, கோவை இளம்சிறார் நீதிமன்றத்தில், வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த மாஜிஸ்திரேட் அருண்குமார் மற்றும் உறுப்பினர்கள் ஜெனிபர் புஷ்பலதா, மகேஷ் ஆகியோர், குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும், தலா மூன்றாண்டு சிறை, தலா,2,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தனர். தற்போது, 24 மற்றும் 26 வயதான இருவரும், கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை