உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அனுமதியில்லாத காட்டேஜ்க்கு சீல்

அனுமதியில்லாத காட்டேஜ்க்கு சீல்

வால்பாறை:சோலையாறு அணைப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட மூன்று காட்டேஜ்களை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர்.வால்பாறை அடுத்துள்ளது சோலையாறுடேம் இடது கரை. இங்கு கடந்த மாதம், 30ம் தேதி பெய்த கனமழையின் காரணமாக, மண் சரிந்து, பாட்டி, பேத்தி இருவரும் உயிரிழந்தனர்.இந்நிலையில், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து, காட்டேஜ் கட்டி, சுற்றுலா பயணியரை தங்க வைப்பதை, மாவட்ட கலெக்டர் ஆய்வின் போது கண்டறிந்தார்.இதனை தொடர்ந்து, வால்பாறை தாசில்தார் சிவக்குமார், நகராட்சி கமிஷனர் விநாயகம் ஆகியோர் தலைமையில், சோலையாறுடேம், பன்னிமேடு ரோடு இடது கரைப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட மூன்று காட்டேஜ்களை பூட்டி, அதிகாரிகள் 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

நிக்கோல்தாம்சன்
ஆக 02, 2024 17:39

அதை கட்டும்போது உதவிய அதிகாரிகள் , கட்சிக்காரர்களுக்கு பூக்களை கொடுங்க மக்களே


sugadhan
ஆக 02, 2024 14:58

யோகி ஜி யின் முறையை பயன்படுத்துங்கள். புல்டோசர் அனுப்பி இடித்து தள்ளவேண்டும். சீல் வைப்பது கண்துடைப்பு மட்டுமே


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஆக 02, 2024 11:08

அதை கட்டும்போது ....


VENKATASUBRAMANIAN
ஆக 02, 2024 07:39

கட்டும்போது தூங்கினார்களா


சுந்தரம் விஸ்வநாதன்
ஆக 02, 2024 11:01

அநாவசியமாக குற்றம் சுமத்தவேண்டாம். கட்டும்போது மட்டுமல்ல, மின் இணைப்பு, குடி நீர் இணைப்பு கழிவு நீர் இணைப்பு சாலை அமைப்பு போன்ற பல பணிகள் நடக்கும்போதும் தான் தூங்கினார்கள். அத்துடன் நகராட்சிக்கு ஒழுங்காக வரி கட்டும்போதும் தூங்கினார்களாம்.


மேலும் செய்திகள்