உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆவணம் இல்லாத வாகனங்கள் சிக்கின

ஆவணம் இல்லாத வாகனங்கள் சிக்கின

சூலுார்:சூலுாரில் போலீசாரின் வாகன சோதனையில், நம்பர் பிளேட் மற்றும் ஆவணங்கள் இல்லாத பைக்குகள் சிக்கின. சூலுாரில், இரு நாட்களாக போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அதில், நம்பர் பிளேட் இல்லாத பைக்குகள் மற்றும் ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். வழக்குப்பதிவு செய்த போலீசார், அபராதம் விதித்தனர். போலீசார் கூறுகையில், 'எஸ்.பி., உத்தரவின்படி, சூலூர் பகுதியில் வாகன சோதனை நடந்தது. நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர் ஒட்டியிருத்தல், உரிய ஆவணங்கள் இல்லாதது, நம்பர் பிளேட் இல்லாத பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி