உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வட கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

வட கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா

சூலுார்:ஜே.கிருஷ்ணாபுரம் வட கருப்பண்ண சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.சுல்தான்பேட்டை அடுத்த ஜே.கிருஷ்ணாபுரத்தில் உள்ள வட கருப்பண்ண சுவாமி, தன்னாசியப்பன் கோவில் பழமையானவை. இங்கு திருப்பணிகள் முடிந்து நேற்று முன் தினம் காலை கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. இரண்டு கால ஹோமம் முடிந்து நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, வட கருப்பண்ண சுவாமி, தன்னாசியப்பன் சுவாமிக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் வட கருப்பண்ண சுவாமி, தன்னாசியப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மகா தீபாராதனைக்கு பின், அன்னதானம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ