உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகன ஆக்கிரமிப்பால் தவிப்பு

அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகன ஆக்கிரமிப்பால் தவிப்பு

உடுமலை : உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில், வாகனங்கள் ஆக்கிரமிப்பு காரணமாக ஆம்புலன்ஸ்கள் கூட செல்ல முடியாத சிக்கல் ஏற்பட்டுள்ளது.உடுமலை வ.உ.சி., வீதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தாலுகா மருத்துவமனையாக இது உள்ளது.இம்மருத்துவமனைக்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து தினமும் நுாற்றுக்கணக்கானவர்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 500க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் சின்னார், திருமூர்த்திமலை பகுதிக்குட்பட்ட மலைவாழ் மக்களும் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் வாகனங்கள் நிறுத்த, உரிய இட வசதி செய்து தராததோடு, பாதுகாப்பு குறைபாடு காரணமாக, பிரதான நுழைவாயிலை, மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே, ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.இதனால், அவசர மருத்துவ சிகிச்சைக்கு வரும் ஆம்புலன்ஸ்கள் கூட, உள்ளே நுழைய முடியாத சிக்கல் ஏற்படுகிறது.எனவே, வாகனம் நிறுத்த ஒதுக்கப்பட்ட இடங்களில், இரு சக்கர வாகனங்களை நிறுத்த அரசு மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், அரசு மருத்துவமனை ரோட்டில் இரு புறமும், நடை பாதை மற்றும் வாகனங்கள் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கடைகள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது. இவற்றையும் அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை