| ADDED : ஜூன் 28, 2024 11:53 PM
கிணத்துக்கடவு;பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தி, பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள, 34 ஊராட்சிகளிலும் நடந்த சிறப்பு கிராம சபை கூட்டத்தில், கலைஞர் கனவு இல்லம் திட்டம் மற்றும் வீடுகள் பராமரிப்பு குறித்து பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், மொத்தமாக, 2,336 ஆண்கள் மற்றும் 2,796 பெண்கள் என மொத்தம் 5,132 நபர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் கனவு இல்லம் மற்றும் வீடுகள் பராமரிப்பு பயனாளர்கள் தேர்வு குறித்து ஒரு தீர்மானம் மட்டுமே நிறைவேற்றப்பட்டது.இதே போன்று, பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள், தெற்கு ஒன்றியத்தில், 26 ஊராட்சிகள், மற்றும் ஆனைமலை ஒன்றியத்தில், 19 ஊராட்சிகளிலும், சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தி, இதே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.