மேலும் செய்திகள்
விநாயகர் சதுர்த்தி விழா போலீசார் ஆலோசனை
25-Aug-2024
விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம்
28-Aug-2024
சூலுார்;விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் அமைதியாக நடக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என, சூலுார் போலீசார் அறிவுறுத்தினர்.வரும், 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. சூலூர் சுற்றுவட்டாரத்தில் இந்து இயக்கங்கள் சார்பில், 100க்கும் மேற்பட்ட சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. 9ம் தேதி பொதுக்கூட்டங்கள் மற்றும் விசர்ஜன ஊர்வலம் நடக்க உள்ளது. இதையொட்டி, சூலுார் போலீஸ் ஸ்டேஷனில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் மாதையன் பேசுகையில், ''விதிமுறைகளை கடைபிடித்து விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் அமைதியாக நடக்க அனைவரது ஒத்துழைப்பும் அவசியம். பிற வழிபாட்டு தலங்களுக்கு முன், கோஷமிடவோ, இசைக்கருவிகளை வாசிக்கவோ வேண்டாம். வாகனங்களில் அளவுக்கு அதிகமான ஆட்களை ஏற்றக்கூடாது,'' என்றார். நொய்யல் ஆற்றில் கழிவு நீர் அதிகளவில் வருவதால், சூலூர் சின்ன குளத்தில் சிலைகளை கரைக்க அனுமதிக்க வேண்டும், என, ஹிந்து இயக்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து பரிசீலித்து முடிவை தெரிவிப்பதாக போலீசார் கூறினர். ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராஜ்குமார், தமிழ்நாடு விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில இணை பொதுச்செயலாளர் விஜயகுமார், வீர ஹிந்து சேவா நிர்வாகி கிருஷ்ணகுமார், இ.ம.க., மாவட்ட தலைவர் கோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
25-Aug-2024
28-Aug-2024