உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவுசார் மையத்தில் நாளை தொழில் படிப்பு கருத்தரங்கம்

அறிவுசார் மையத்தில் நாளை தொழில் படிப்பு கருத்தரங்கம்

மேட்டுப்பாளையம்:தொழிற் படிப்புக்கான கருத்தரங்கம், மேட்டுப்பாளையம் அறிவுசார் மையத்தில் நாளை, (11ம் தேதி) நடைபெற உள்ளது. மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில், நுாலகம் மற்றும் அறிவுசார் மையம், மணிநகர் உயர்நிலைப் பள்ளி எதிரே செயல்படுகிறது. இந்த நுாலகம் மற்றும் அறிவு சார் மையத்தில், மத்திய, மாநில அரசுகள் நடத்தும், அனைத்து விதமான போட்டி தேர்வுகள் எழுதும், மாணவர்களுக்கு வழிகாட்டும் நோக்கத்துடன், ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், நான்காவது குரூப் பணிகளுக்கான தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகி உள்ளது. இந்த மாணவ, மாணவியருக்கு தொழிற் படிப்புக்கான சார்ட்டர்டு அக்கவுண்டன்சி, காஸ்ட் அக்கவுண்டன்சி, கம்பெனி செக்யூரிட்டி சிப் ஆகிய பாடப்பிரிவுகளை பற்றிய, ஒரு முழுமையான விளக்கத்தையும், வழிகாட்டுதலையும், சம்பந்தப்பட்ட துறை வல்லுனர்களால், சிறப்பு கருத்தரங்கம் நடத்த, நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. நாளை (11ம் தேதி) காலை, 10 மணிக்கு இந்த கருத்தரங்கம், அறிவுசார் மையத்தில் நடைபெற உள்ளது.இக்கருத்தரங்கில் தொழில் படிப்புகளுக்கான நுழைவுத் தகுதி, பயில வேண்டிய பாடங்கள், பயிற்சி கட்டணம், இந்த படிப்புகளுக்கான வேலை வாய்ப்புகள் போன்ற அனைத்து விபரங்களையும், தெரிந்து கொள்ளலாம். எனவே இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளும்படி, நகராட்சி கமிஷனர் அமுதா கேட்டுக்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி