உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு

வாலிபால் பயிற்சி முகாம் நிறைவு

கோவை;உச்சையனுார் கிராமத்தில் நடந்த, வாலிபால் இலவச பயிற்சி முகாம் நிறைவு பெற்றது. உச்சையனுார் மோகன் ராஜ் நினைவு வாலிபால் கிளப் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச வாலிபால் பயிற்சி முகாம், மே முதல் வாரம் துவங்கி ஒரு மாதகாலம் நடைபெற்றது. இதில் உச்சையனுார் கிராமத்தை சேர்ந்த, 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு வாலிபால் விளையாட்டின் விதிமுறைகள், அடிப்படை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சி முகாமின் நிறைவு விழாவில், மோகன்ராஜ் நினைவு வாலிபால் கிளப் நிர்வாகிகள் பங்கேற்று, மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், சீருடையும் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை