உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வ.உ.சி., பூங்காவில் கடமான் மட்டுமே பாக்கி

வ.உ.சி., பூங்காவில் கடமான் மட்டுமே பாக்கி

கோவை, : கோவை வ.உ.சி., பூங்கா வில் அனைத்து உயிரினங்களும் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், கடமானை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.கோவை வ.உ.சி., உயிரியல் பூங்காவை மேம்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், கடந்த, 2022 ம் ஆண்டு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. உயிரினங்கள் நலன் சார்ந்த விஷயம் என்பதால், தமிழக உயிரியல் பூங்கா ஆணையத்திடம், வ.உ.சி., உயிரியல் பூங்காவை ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, மாநகராட்சியும் கடிதம் எழுத, தலைமை வன உயிரின காப்பாளர், பூங்கா உயிரினங்களை இடமாற்ற, கடந்தாண்டு அனுமதி அளித்தார். இதையடுத்து அனைத்து விலங்குகளும் இடமாற்றம் செய்யப்பட்டன. தற்போது கடமான் மட்டுமே உள்ளது. விரைவில் கடமானும் இடமாற்றம் செய்யப்படும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் கூறுகையில்,''கடமானுக்கு காயம் உள்ளது. அதற்கான சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. குணமடைந்த உடன் கடமான் வனத்துக்குள் விடுவிக்கப்படும். பூங்காவில் இருந்த விலங்குகளுக்கு காட்டில் அவை உட்கொள்ளும் உணவுகள் வழங்கப்பட்டு, அவை காட்டு சூழலுக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டுள்ளன. அவை வனத்தில் வாழும் சூழலுக்கு மாறியதால் தான் வனத்துக்குள் விடுவிக்கப்பட்டுள்ளன,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !