உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வார்டு பிரச்னைகளை விரைந்து தீர்க்கணும்

வார்டு பிரச்னைகளை விரைந்து தீர்க்கணும்

கோவை : 'கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட வார்டு பிரச்னைகளை விரைவில், தீர்க்க வேண்டும்' என, கிழக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் மண்டல தலைவர் அறிவுறுத்தினார்.கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டல வார்டு குழு கூட்டம், கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி தலைமையில் நேற்று நடந்தது. கிழக்கு மண்டலம் உதவி ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி, ''கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து, ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் எடுத்து, பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும்,'' என்று பேசினார்.கூட்டத்தில், கவுன்சிலர்கள் நவீன், பொன்னுச்சாமி, கோவிந்தராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்று தங்களுடைய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பிரச்னைகள் குறித்து விவாதித்தனர். உதவி செயற்பொறியாளர் ராஜேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை