நடக்கவும் முடியவில்லை
சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிதாக தார்சாலை அமைக்கப்பட்டது. இருப்பினும், மழை பெய்யும் போது, சாலையில் மழைநீரோடு, சாக்கடையும் கலந்து ஆறு போல ஓடுகிறது. மழை நின்ற பின்னும், இரண்டு நாட்களுக்கு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சாலையில் நடந்து செல்லவே முடியவில்லை.- மாலதி, சுந்தராபுரம். ஆக்கிரமிப்புகளால் நெருக்கடி
சுந்தராபுரம் -பொள்ளாச்சி ரோடு மற்றும் மதுக்கரை ரோடு பகுதிகளில், பல இடங்களில் கடைக்காரர்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளனர். கடைகளுக்கு வருவோரும் வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி செல்கின்றனர். குறுகலான சாலையில் இதனால் மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. - தமிழ்செல்வி, மதுக்கரை. குண்டும், குழியுமான ரோடு
பேரூர், செட்டிபாளையம், போஸ்டல் காலனியில் பல இடங்களில், சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழை சமயங்களில், வாகனங்கள் அடிக்கடி சேற்றில் மாட்டிக்கொள்கிறது. பலர் சேற்றில் வழுக்கி விழுகின்றனர். விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும்.- காயத்திரி, பேரூர். கடும் துர்நாற்றம்
உப்பிலிபாளையம், 54வது வார்டு, காமராஜர் மெயின் ரோடு, பேங்க் ஆப் பரோடா வங்கி அருகில், சாக்கடை கால்வாய் பல மாதங்களாக சுத்தம் செய்யவில்லை. பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து, கழிவுநீர் தேங்கி, கடும் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேட்டால் நோய் பரவும் அபாயம் உள்ளது.- ராஜ், உப்பிலிபாளையம். மண் சாலையால் அவதி
வடவள்ளி, நவாவூர் பிரிவு, ஏழாவது கிராஸ் ரோடு, குருசாமி நகர் பேஸ் - 4ல், மண் சாலையே உள்ளது. மழை சமயங்களில், சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. இதனால், வாகனஓட்டிகள், நடந்து செல்வோர் சிரமத்திற்குள்ளாகின்றனர். இப்பகுதியில், தார் சாலை அமைத்து தர வேண்டும்.- விஜயா, வடவள்ளி. சாலையில் தேங்கும் மழைநீர்
பூ மார்க்கெட் பேருந்து நிறுத்தம் மற்றும் ரோட்டுக்கு இடைப்பட்ட பகுதி, மிகவும் தாழ்வாக உள்ளது. இதனால், மழைநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. பயணிகள் தண்ணீரில் இறங்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தண்ணீர் தேங்கா வண்ணம் சாலையை சீரமைக்க வேண்டும்.- ஆறுச்சாமி, ஆர்.எஸ்.புரம். வீணாகும் குடிநீர்
போத்தனுார், 100வது வார்டு, அண்ணாபுரம் பகுதியில், பெத்தேல் ஸ்டோர் அருகே, சிறுவாணி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பல நாட்களாக குடிநீர் சாக்கடையில் வீணாகிறது. பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்யவில்லை.- மதீஸ்வரன், போத்தனுார். குப்பை கொட்டுவது யார்
சுந்தராபுரம், கல்லுக்குழி ரோடு, 53வது வார்டு, முத்துநகரில், திறந்தவெளியில் குப்பை கொட்டப்படுகிறது. குப்பையை அகற்றுவதுடன், திறந்தவெளியில் குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரத்தினம், சுந்தராபுரம். தெருநாய் தொல்லை
சிங்காநல்லுார், சாந்தி சோசியல் சர்வீஸ், எதிர்புறம், டெக்ஸ்டூல் லே-அவுட், சூர்யா கார்டன் பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றுகின்றன. சாலையில் நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோரை, நாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன.- அஜீதா, சிங்காநல்லுார்.