மேலும் செய்திகள்
பூமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
29-Jan-2025
வால்பாறை: ேஷக்கல்முடி எஸ்டேட் சிவன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த, திருக்கல்யாணத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை அடுத்துள்ளது ேஷக்கல்முடி எஸ்டேட் சிவன்கோவில், 51ம் ஆண்டு திருவிழா கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில், நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு மஹாபிரதோஷ பூஜை நடந்தது. விழாவில் நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி ேஹாமம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு பல்வேறு கோவில்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தம் மற்றும் முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.தொடர்ந்து, அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது. சிவபெருமானுக்கும், விசாலாட்சி அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இன்று, அதிகாலை வரை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
29-Jan-2025