உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாராந்திர ஆய்வு கூட்டம்

வாராந்திர ஆய்வு கூட்டம்

வால்பாறை;வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், வாராந்திர ஆய்வு கூட்டம் நடந்தது.ஆனைமலை வட்டாரம் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வாராந்திர ஆய்வு கூட்டம் நடந்தது. ஆஷா பணியாளர்களுக்கு தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு நலக்கல்வி அளிக்கப்பட்டது.கோவை மாவட்ட துணை இயக்குனர் (தொழுநோய்) டாக்டர் சிவகுமாரி பங்கேற்று பேசினார். வால்பாறை அரசு மருத்துவமனை டாக்டர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து, தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் செல்லத்துரை, இதற்கான ஏற்பாடு செய்து இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ