உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெயில்... வெயில்கோ அவே; மழைக்காக பிரார்த்தனை

வெயில்... வெயில்கோ அவே; மழைக்காக பிரார்த்தனை

போத்தனூர்:நாகசக்தி அம்மன் தியான பீடத்தில், மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது.மலுமிச்சம்பட்டியிலுள்ள நாகசக்தி அம்மன் தியான பீடத்தில், நேற்று சிவசண்முகசுந்தரபாபு சுவாமிகள் தலைமையில் மழை வேண்டியும், நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சிக்காக, 1008 வேப்பிலை மாலை அர்ச்சனையுடன் நடந்தது. நாக சக்தி அம்மனுக்கு, 21 அபிஷேக பூஜைகள், 51 மஞ்சள் கலச தீர்த்த அபிஷேகம், 1008 மலர் அர்ச்சனையும் நடந்தன.உலக நலனுக்காக, சர்வமங்கள மந்திரங்கள் கூறப்பட்டு பக்தர்களுக்கு வேப்பிலை பிரசாதம், கம்பங்கூழ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பாக்யலட்சுமி, உமாமகேஸ்வரி, தங்கதுரை, இளைய பட்டம் பாலரிஷி, நாக விக்னேஷ் சுவாமிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை