உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நல வாரிய திட்டங்கள் எளிமையாகியுள்ளன; தொழிலாளர் நலவாரிய தலைவர் தகவல்

நல வாரிய திட்டங்கள் எளிமையாகியுள்ளன; தொழிலாளர் நலவாரிய தலைவர் தகவல்

கோவை : தொழிலாளர் நல வாரிய திட்டங்கள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் கூறினார்.கோவை கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமான அமைப்பு சாரா தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் முன்னிலையில் நடந்தது. இதில் தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய தலைவர் பொன்குமார் பேசியதாவது: தொழிலாளர் நல துறையின் கீழ் தமிழ்நாடு கட்டுமானம் வாரியம், அமைப்புசாரா உடலுழைப்பு தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர்கள் நல வாரியம் உள்ளிட்ட 36 நலவாரியங்கள் உள்ளன. அனைத்து வாரியங்களை சேர்த்து மொத்தமாக 44 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளில் தொழிலாளர்களுக்கு 1,600 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் பதிவு செய்து 1,49,003 உறுப்பினர்கள் உள்ளனர்.தற்போது நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான முறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. நல வாரியங்களில் உறுப்பினராக பதிவு, புதுப்பித்தல் மற்றும் உதவித் தொகைகள் பெறுவதற்கு இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை பதிவேற்றம் செய்து நலவாரிய பலன்களை பெறலாம். இவ்வாறு அவர் பேசினார். 1,574 பயனாளிகளுக்கு 73.91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய தலைவர் வழங்கினார். இதில் கோவை, தொழிலாளர் இணை கமிஷனர் லீலாவதி, தொழிலாளர் உதவி கமிஷனர் பாலதண்டாயுதம், தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலக கண்காணிப்பாளர் மாலினி, தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ