உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உடல் பருமனால் அதிகரிக்கும் நோய்கள்; பாதிப்பு தடுக்க என்ன செய்ய வேண்டும்?

உடல் பருமனால் அதிகரிக்கும் நோய்கள்; பாதிப்பு தடுக்க என்ன செய்ய வேண்டும்?

கோவை;அவினாசிலிங்கம் மனை யியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனம் சார்பில் ராஜம்மாள் தேவதாஸ், 22வது நினைவு சொற்பொழிவு நிகழ்வு நேற்று நடந்தது. வேந்தர் மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்து நிகழ்ச்சியை துவக்கிவைத்தார்.இதில், பங்கேற்ற வி.ஜி.எம். மருத்துவமனையின் தலைவர்டாக்டர் மோகன் பிரசாத் கூறியதாவது:இந்தியாவில், உடல் பருமனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தொற்றுநோய்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இருப்பதில்லை. ஆண்டுதோறும் ஏப்.,7ம் தேதி, உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது.உடல் பருமன் கொண்ட மக்கள் தொகையில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாம் இடத்தில், இந்தியா உள்ளது. பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளிடமும் இப்பிரச்னை அதிகம் காணப்படுகிறது.இந்தியாவில் உடல் பருமன் சார்ந்த பிரச்னை வேகமாக அதிகரித்து வருகிறது. உடல் உழைப்பு அற்ற வாழ்க்கை முறை, எளிதாகவும், மலிவாகவும்கிடைக்கும் நொறுக்குத்தீனிகள் போன்றவை உடல் எடை அதிகரிப்புக்கு காரணம்.இது, இதயநோய்கள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், கீழ்வாதம், சிறுநீரக நோய் உள்ளிட்ட கோளாறுகளை ஏற்படுத்துகிறது. வாழ்க்கை முறை, உணவு முறையில் மாற்றங்கள், உடற்பயிற்சிகள் மட்டுமே, இதற்கு சரியான தீர்வாக இருக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.இதில், உலக சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், பதிவாளர் கவுசல்யா, டீன் அம்சமணி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ