| ADDED : ஜூலை 31, 2024 02:12 AM
அன்னுார்:பயிர் காப்பீடு திட்டத்தில் பிரீமியம் செலுத்த விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேளாண் உதவி இயக்குனர் பிந்து வெளியிட்டுள்ள அறிக்கை : விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளால் பயிர் மகசூல் இழப்பிலிருந்து பாதுகாத்து கொள்ள பயிர் காப்பீடு அவசியம். காரிப் பருவத்தில் பயிர் காப்பீடு செய்ய சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, பயிர் காப்பீடுக்கன முன்மொழிவு விண்ணப்பம், பிரீமியம் ஆகியவற்றுடன் இ சேவை மையத்தில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்.பச்சைப் பயறுக்கு ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரத்து நானுாறு ரூபாய்க்கு காப்பீடு செய்ய 308 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கு இன்று கடைசி நாள்.மக்காச்சோள பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு 36 ஆயிரத்து 100 ரூபாய்க்கு காப்பீடு செய்ய 744 ரூபாய் செலுத்த வேண்டும். வருகிற செப். 6ம் தேதி கடைசி நாள் ஆகும். சோளத்திற்கு ஒரு ஏக்கருக்கு 12,240 ரூபாய்க்கு காப்பீடு செய்ய 245 ரூபாய் செலுத்த வேண்டும். கொள்ளு பயிருக்கு ஒரு ஏக்கருக்கு 15,400 ரூபாய்க்கு காப்பீடு செய்ய 308 ரூபாய் செலுத்த வேண்டும். இவ்விரு பயிர்களுக்கும் செப். 16ம் தேதி கடைசி நாள் ஆகும். மேலும் விபரங்களை அன்னுார் மற்றும் கணேசபுரம் வேளாண் விரிவாக்கம் மையத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்