| ADDED : மே 10, 2024 10:33 PM
பெ.நா.பாளையம்:பெண்கள் கருணைக் கடல் போன்றவர்கள் என, ஆன்மிக சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசினார்.கோவை மாவட்டம், துடியலூர் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனி கேட் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் ஸ்ரீ ராதே கிருஷ்ணா சேவா கமிட்டி மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்பிராஸ்) இணைந்து நடத்தும் ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவ மூன்று நாள் விழா நேற்று தொடங்கியது.நேற்று காலை மகா கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, பக்தி பாடல்கள் நிகழ்ச்சி இடம் பெற்றது. 'காஞ்சியும் அயோத்தியும்' என்ற தலைப்பில் நாகை முகுந்தன் பேசுகையில், ராதா கல்யாணம், ருக்மணி கல்யாணம், சீதா கல்யாணம், வள்ளி கல்யாணம், பார்வதி கல்யாணம் எல்லாவற்றிலும் பெண்களின் பெயரே முன்னணியில் உள்ளது. இதற்கு காரணம் பெண்கள் கருணைக்கடல் போன்றவர்கள் என்பதுதான். அவர்களுக்கு ஏற்றத்தை தருவதற்காகவே இது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகின்றன. வைகுண்டத்தை விட உயர்ந்தது காஞ்சி. இந்திரலோகம் உள்ளிட்ட லோகங்களை விட உயர்ந்தது அயோத்தி. ஒன்றை இல்லை என்று சொல்வதற்கு பகுத்தறிவு தேவையில்லை. இருக்கிறது என்று சொல்வதற்கு தான் பகுத்தறிவு தேவை. கடவுள் இல்லை என்று சொல்வதற்கு பகுத்தறிவு தேவை இல்லை. உண்டு என சொல்வதற்குதான் பகுத்தறிவு தேவை. கர்மாவின் தீவிரத்தை பூஜை, பரிகாரம் போன்றவைகளால் குறைக்கலாம். உலக மக்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்பதே சனாதான தர்மம். என்றார்.நிகழ்ச்சியின் இரண்டாம் நாளான இன்று ஆதித்யா ரமேஷ் பாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தனம், பரதநாட்டியம், வாய்ப்பாட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை காலை, 10:00 மணிக்கு ராதா கல்யாண உற்சவம் நடக்கிறது.