உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்

கரடி தாக்கியதில் தொழிலாளி காயம்

வால்பாறை:வால்பாறை அடுத்துள்ள, வில்லோனி எஸ்டேட் பகுதியில் கரடி தாக்கியதில், தொழிலாளி காயமடைந்தார்.வால்பாறை வனச்சரகம், தனியார் காடுகள் பராமரிப்பு பிரிவுக்குட்பட்ட, டாட்டா காபி எஸ்டேட்டில் உள்ள, வில்லோனி எஸ்டேட் மேலாளர் குடியிருப்புக்கு, அதே பகுதியை சேர்ந்த, லட்சுமணன், 58, என்பவர் நேற்று காலை, 9:00 மணிக்கு பணிக்கு சென்றார்.அப்போது, தேயிலை தோட்டத்தில் இருந்த கரடி, எதிர்பாராத விதமாக அவரை தாக்கியதில் காயமடைந்தார். அவரது அலறல் சப்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, உருளிக்கல் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !