உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை விழா மாரத்தான் போட்டி பங்கேற்க முன்பதிவு செய்யலாம் 

கோவை விழா மாரத்தான் போட்டி பங்கேற்க முன்பதிவு செய்யலாம் 

கோவை;கோவை விழாவின் ஒரு பகுதியாக நடக்கவுள்ள விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் பங்கேற்க முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது.கோவை விழாவின் 17ம் பதிப்பு, வரும் நவ.,24ம் தேதி முதல் நடக்கவுள்ளது. கோவை விழாவில் கோவையின் வரலாறு, கலாசாரத்தை வெளிப்படுத்தும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, இந்தாண்டு, போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு மற்றும் 'ஆரோக்கியமான வாழ்வு' என்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியும் நடக்கிறது.இதில், 2.5கிமீ., 5 கிமீ., 10கிமீ., 15 கிமீ., என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படவுள்ளன. மாரத்தான் டி சர்ட்டை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டு முன்பதிவை துவக்கி வைத்தார்.பங்கேற்க விரும்புவோர் www.coimbatorevizha.comஎன்ற தளத்தில் பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !