மேலும் செய்திகள்
ரேஷன் கடைகளில் கண்விழித்திரை பதிவு
08-Aug-2024
கோவை;கோவையில் உள்ள ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டுதார்களுக்கு இன்று முழுமையாக பொருட்கள் வழங்க வேண்டும் என, மாவட்ட வழங்கல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.ரேஷன் கடைகளில் மாதத்தின் கடைசி வேலை நாளில், விற்பனை விபரங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விபரங்கள் சரிபார்ப்பு போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.இந்நிலையில் இன்று, 31ம் தேதி சனிக்கிழமை பணி நாளன்று அனைத்து ரேஷன் கார்டுதார்களுக்கும் முழுமையாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய வேண்டும் என, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரேகா உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் கூறியாதாவது: கடந்த சில மாதங்களாக ரேஷன் கடைகளில் முழுமையாக அரிசி, பாருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படவில்லை என, கார்டுதாரர்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. அதனால் 30, 31ம் தேதிகளில் ரேஷன் பொருட்கள் வாங்காத கார்டுதார்களுக்கு முழுமையாக பொருட்கள் வழங்கப்படுகிறது. இது குறித்த தகவல் கார்டுதார்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொறு மாதமும் இது பின் பற்றப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்....
08-Aug-2024