மேலும் செய்திகள்
சென்னையில் இன்று மாநில யூத் தடகளம்
22-Feb-2025
கோவை, ; தமிழ்நாடு இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கோவை வீரர்கள், 1,600 மீ., தொடர் ஓட்டத்தில், இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், ஆறாவது தமிழ்நாடு இளையோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, சென்னை, ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில், இரு நாட்கள் நடந்தது. இதில், 100 மீ., 200 மீ., 1,600 மீ., ஓட்டம் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.கோவை, திருப்பூர் உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 20 வயதுக்குட்பட்டோருக்கான, 1,600 மீ., தொடர் ஓட்டத்தில் கோவையை சேர்ந்த ஜனார்தனன், துளசிவேணு, ஜிதேந்திர குமார், வேலு பங்கேற்ற அணி, இரண்டாம் இடத்தை பிடித்தது.இதில், வீரர் ஜிதேந்திரகுமார், ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரி மெக்கானிக்கல் துறை இரண்டாமாண்டு பயின்று வருகிறார். இரண்டாம் பரிசு வென்ற அணி வீரர்களை, கல்லுாரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.
22-Feb-2025