உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலி

ஆட்டோ கவிழ்ந்து வாலிபர் பலி

மேட்டுப்பாளையம்; காரமடை பெரியபுதுார் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்,19. இவரும் இவரது உறவினர்களான ராஜாத்தி,31, கோகிலா, 24, சத்யா, 32, ஆகியோர் நேற்று அதிகாலை காரமடை கரியாம்பாளையம் சாலையில் உள்ள தனியார் வே பிரிட்ஜ் அருகே சென்ற போது, ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லோகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றவர்கள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டனர். காரமடை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை