மேலும் செய்திகள்
வர்ணம் பூசாத வேகத்தடை வாகன ஓட்டிகள் அச்சம்
26-Aug-2024
கோவை : சுண்டக்காமுத்துார் எம்.எம்.கார்டன் பகுதியை சேர்ந்த அசோக் குமார் மகன், சக்திசரண், 24. இவர் எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி, எம்.ஜி.ரோட்டில் தனது இரு சக்கர வாகனத்தில், ஹெல்மெட் அணியாமல் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் உள்ள ஏ.டி.எம், சென்டர் அருகே உள்ள வேகத்தடையை கவனிக்காமல், வேகமாக வந்துள்ளார். கடைசி நிமிடத்தில் பார்த்த சக்திசரண் 'பிரேக்' பிடிக்க, இருசக்கர வாகனம் சறுக்கி சாலையில் விழுந்துள்ளார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சக்திசரணை பரிசோதித்து, உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கிழக்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். வேகத்தடை காரணம்?
மாநகரில் உள்ள நுாற்றுக்கணக்கான வேகத்தடைகளில் பெரும்பாலான வேகத் தடைகள் ஐ.ஆர்.சி., (இந்தியன் ரோடு காங்கிரஸ்) விதிமுறைகளின் படி அமைக்கப்படவில்லை.போலீசாரின் தகவல் படி, மாநகரில் உள்ள சாலைகளில் மொத்தம், 245 வேகத்தடைகள் உள்ளன. அதில் 44 மட்டுமே ஐ.ஆர்.சி.,யின் விதிமுறைகளின் படி உள்ளன. பல வேகத்தடைகளில் 'வெள்ளை' பெயின்ட் அல்லது வேகத்தடைக்கு முன் எச்சரிக்கை பலகை உள்ளிட்டவை இல்லாமல் இருக்கிறது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், ''மாநகர் பகுதிகளில் இன்னும் சுமார் 200 வேகத்தடைகள், ஐ.ஆர்.சி., விதிமுறைப்படி மாற்றியமைக்க கூறியுள்ளோம். பொதுவாகவே, விபத்து நடப்பதை தவிர்க்க வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன. வேகத்தடைகளால் விபத்து ஏற்படுகிறா என்பதை ஆய்வு செய்து, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தேவையற்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என்றார்.
26-Aug-2024