உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 10 பேர் தேடப்படும் குற்றவாளிகள்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 10 பேர் தேடப்படும் குற்றவாளிகள்

பொள்ளாச்சி; ரேஷன் அரிசி கடத்திய வழக்குகளில், கோர்ட்டில் ஆஜராகாத 10 பேர், தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். ரேஷன் அரிசி கடத்தலை கண்டறிந்து தடுக்க, குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், ரேஷன் அரிசி கடத்தும் நபர்கள் கைது செய்யப்பட்டு, வழக்குகள் கோவை குற்றவியல் நீதித்துறை கோர்ட் 4ல், நடக்கிறது. இந்நிலையில், ரேஷன் அரிசி கடத்தியதாக கைதான கோவையை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், மோகன்ராஜ், காஜாஉசேன், யோகராஜ், தன்ராஜ், சக்திவேல், இம்ரான்கான், பழநியைச் சேர்ந்த குமரேசன், பொள்ளாச்சியைச் சேர்ந்த நடராஜ், சுரேஷ் ஆகியோர் மீதான விசாரணை கோர்ட்டில் நடந்து வருகிறது. இவர்கள், கோர்ட்டில் ஆஜராகாமல் இருப்பதால் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். எனவே, குற்றம் சாட்டப்பட்ட நபர்கள், கோர்ட்டில் நேரிலோ அல்லது வக்கீல் வாயிலாகவோ ஆஜராக வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது என, குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுதுறை போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை