மேலும் செய்திகள்
முருகன் கோவில்களில் வைகாசி விசாகத் திருவிழா
10-Jun-2025
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ஸ்ரீ சத்ய சாய் பாபா கோவிலில், 100 சிவாலய ருத்ர பாராயணம் நடைபெற்றது.மேட்டுப்பாளையம் அன்னபூரணி பேட்டையில் ஸ்ரீ சத்ய சாய் பாபா கோவில் மற்றும் சமிதி உள்ளது.இங்கு சாய்பாபாவின் நூறாவது பிறந்த ஆண்டு வைபவத்தை முன்னிட்டு, நேற்று, 100 சிவாலய ருத்ர பாராயணம் நடந்தது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சாய் பாபா பக்தர்கள், இந்த ருத்ர பாராயணத்தில் பங்கேற்றனர். காலை, 9:00 மணிக்கு துவங்கி மதியம் ஒரு மணி வரை நடைபெற்றது. மேட்டுப்பாளையத்தில் இது, 48-வது பாராயணம் ஆகும். இதில் ஏராளமான சாய் பக்தர்கள் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் சாய் சமிதிகளின் கண்வீனர்கள் செய்திருந்தனர்.
10-Jun-2025