குப்பை கிடங்கில் 10 ஆயிரம் மரக்கன்று
கோவை; வெள்ளலுார் குப்பை கிடங்கு வளாகத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், 25 ஏக்கரில் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. உரக்கிடங்கு எல்லை பகுதியில், 3,000 மரக்கன்றுகள், இதர இடங்களில், 1,850 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.வனத்துறை சார்பில் பெறப்பட்ட பாதாம், பூவரசன், அரசன், மந்தாரை, நாவல் உட்பட பல வகையான, 10 ஆயிரம் மரக்கன்றுகள் நேற்று வெள்ளலுார் குப்பை கிடங்குக்கு அனுப்பப்பட்டன. ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட வன அலுவலர் முகாம் அலுவலகத்தில் இருந்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர், மரக்கன்றுகளை அனுப்பும் பணியை பார்வையிட்டனர்.